உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது பாஜக சார்பில் புகார்!

உடுமலை கபூர் கான் வீதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விரிவாக்க பணிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தி ஆட்சியர், நகராட்சி மற்றும் எஸ்.பி அலுவலகங்களில் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விரிவாக்க பணிக்கு தடை விதிக்க கோரி பாஜக சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர் கான் வீதியில் இந்திய கம்யூனிஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இந்த கட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையும், நகராட்சியும் இணைந்து புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நகராட்சி ஆணையரும், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளரும் நடவடிக்கை எடுக்காததால் ஏற்கனவே காலி செய்யப்பட்ட இடங்களில் மீண்டும் சட்ட விரோத கடைகள் கட்டடங்கள் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், உடனடியாக தற்பொழுது கட்டப்பட்டு வரும் கட்டடத்தை கட்ட தடை விதித்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் பாஜக சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தபடும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கட்டிடம் கட்டுவது சட்டவிரோதமாகும்.



எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் பாஜகவினர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



இதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், திருப்பூர் நகராட்சி மண்டல அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் ஆய்வாளர் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் பாஜக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...