சூலூர் அருகே குழந்தைகள், பெண்கள் பங்கேற்ற கும்மியாட்டம் - பார்வையாளர்கள் உற்சாகம்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே தாளக்கரை துர்க்கை அம்மன் கோயிலில், குடும்ப வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பஞ்சபாண்டவர் கதையை பாடலாக பாடி நடைபெற்ற கும்மியாட்டத்தில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே தாளக்கரை கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு, 20வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது.

பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் கும்மியாட்டம் நடைபெற்றது.



கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையில் ஒன்றான கும்மி ஆட்டத்தில் பெண்கள் குழந்தைகள் சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குடும்ப வாழ்வியல் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும் வகையில், பஞ்சபாண்டவர்கள் கதையை பாடலாக பாடி அவர்கள் கும்மியடித்தனர்.



குழந்தைகளே கும்மி பாடல்களை அழகு கொங்கு தமிழில் பாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரே சீருடையில் கும்மி பாடலுக்கு ஏற்ப, அவர்கள் கைகளை தட்டி கும்மி ஆட்டத்தை ஆடி சிறப்பித்தனர்.



இதுகுறித்து பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் ஆசிரியர் நாகராஜ் கூறுகையில், பாரம்பரிய கலையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பொதுமக்களிடையே கும்மியாட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 50க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு சென்று 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கும்மி ஆட்டத்தை இலவசமாக கற்பித்து வருகிறேன்.

இன்றைய கால குழந்தைகள், மாணவர்களை, செல்போன், தொலைக்காட்சி மோகங்களில் இருந்து வெளியே கொண்டுவரும் நோக்கத்தோடும் மனதையும் உடலையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த கும்மியாட்ட கலையை தொடர்ந்து கற்பிப்போம், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...