கிணத்துக்கடவில் காட்டுப்பன்றிகள் உலா - வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் கனகராஜ் என்ற விவசாயி தோட்டத்தில் 6 மாதத்திற்கு முன்பு நேந்திரம் வாழை பயிரிட்டு இருந்தார்.



இந்நிலையில், இந்த வாழை கன்றுகளை நள்ளிரவில் வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றிகள் கடித்துக் குதறி சேதப்படுத்தியது.

விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி குளம் கரைப்பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் உள்ளன. இந்த காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் தோட்டத்திற்குள் கும்பலாக புகுந்து வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

வனத்துறையினர் இதனைக் கண்காணித்து இந்த காட்டுப் பன்றிகளை பிடிக்க வேண்டும்.



அப்படி இல்லையெனில் விவசாய தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் நுழையாதவாறு மின்வேலி அமைக்க வனத்துறையினர் அனுமதி தர வேண்டும். தற்போது 500 வாழைக்கன்றுகள் கோடங்கிபாளையத்தில் மட்டும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...