தாராபுரம் உழவர் சந்தையில் தரமற்ற தக்காளி விற்பனை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தாராபுரம் உழவர் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கிலோ ரூ.9க்கு விற்பனை செய்யப்படும் தக்காளியை விவசாயிகள், சில்லறையாகக் கொடுக்காமல் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதால், தரமற்ற தக்காளிகளை விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் உழவர் சந்தையில் தரமற்ற தக்காளி விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குச் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தக்காளிகளை பெட்டியில் அடுக்கி வைத்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.



அதன்படி உழவர் சந்தையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ஒன்பது ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள் தக்காளியை சில்லறையாக விற்பனை செய்யாமல், 15 கிலோ எடைக் கொண்ட பெட்டிகளை வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் தரமற்ற தக்காளியை மட்டுமே விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தரமான தக்காளியை வாங்க உழவர் சந்தைக்கு வந்தால், அங்கும் தரமற்ற தக்காளிகளே விற்பனை செய்வதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்து, சில்லறையில் வாங்கும் பொது மக்களுக்கு அனைத்து காய்கறிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...