கோவை அருகே பைக் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து - தந்தை, மகன் பலியான சோகம்!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து, சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில், தந்தை, மகன் பலியான சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் தந்தையும் மகனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டி அடுத்த நார்த்தங்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவர் தனது மகன் நந்தகுமாருடன் அதிகாலை கோவிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.



இருசக்கர வாகனம் கிட்டாம்பாளையம் நான்கு ரோடு அருகே சென்றபோது, பொள்ளாச்சியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் செல்வத்தை கைது செய்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் மாணவர்களை, சத்தியமங்கலம் தனியார் கல்லூரியில் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ள வைப்பதற்காக கல்லூரி பேருந்தில் அழைத்து சென்ற போது விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையும், மகனும் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்கும் போது பேருந்து மோதும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...