பாஜகவின் 44வது ஆண்டு தொடக்க விழா - தாராபுரத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தாராபுரம் நகரம் சார்பில் நகர தலைவர் விநாயகா டி.சதீஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பல்வேறு பகுதிகளில் ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


கோவை: பாஜகவின் 44வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுமாறு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன்பேரில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி தலைமையில் தெற்கு மாவட்டம் முழுவதும் பா.ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில், தாராபுரம் நகர சார்பில் நகர தலைவர் விநாயகா டி.சதீஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பல்வேறு பகுதிகளில் ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.கார்வேந்தன், மாவட்ட பொருளாளர் சுப்பு என்கிற சுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர் ராஜா என்கிற கோவிந்தசாமி, மாவட்ட துணை தலைவர் பெரியசாமி,

எஸ்.பி.பழனிசாமி, மாநில பொதுகுழு உறுப்பினர் எம்.கே.ராஜு , மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட மகளிரணி மாவட்ட தலைவர் டாக்டர் கார்த்திகா, நகராட்சி கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, தாராபுரம் நகர நிர்வாகிகள், மாநில, மாவட்ட மண்டல் கிளை அணி பிரிவு நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...