கோவையில் காட்டுயானை தாக்கி கூலித் தொழிலாளி பலி - போலீசார் விசாரணை

கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வனப்பகுதியில் மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் தனபால் என்பவர் காட்டு யானை தாக்கி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வனத்துறை மற்றும் ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது தண்ணீர் பந்தல் அருகே உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைடுத்து, அங்கு ஆய்வு செய்தபோது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் தனபால் (வயது39) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு அவ்வழியாக வந்தபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடல் கிடந்த 150 மீட்டரில் அடர் வனப்பகுதி என்பதால் காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். காட்டுயானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம்,மத்துவராயபுரம் பகுதிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...