உடுமலையில் பெய்த கோடை மழையால் நனைந்த நெற்பயிர்கள் - கொள்முதல் காலத்தை நீடிக்க கோரிக்கை!

உடுமலை பகுதியில் சுமார் 800 ஏக்கரில் 2ஆம் போக நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் திடீர் கோடை மழை பெய்தது. எனவே, கொள்முதல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நனைந்தன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அமராவதி பாசனப்பகுதியில் விவசாயிகள் சுமார் 800 ஏக்கரில் 2ஆம் போக நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் திடீர் கோடை மழை பெய்தது.



இதனால் நெற்பயிர்கள் ஈரமாகின. மேலும், அறுவடைக்காக வயல்களுக்குள் இயந்திரங்களை ஓட்டிச் செல்ல முடியாத அளவுக்கு சகதியாகி உள்ளது. குறிப்பாக, குமரலிங்கம், சாமராயபட்டி, கொழுமம், கண்ணாடிபுத்தூர், நீலம்பூர், பாப்பான்கு ளம், ருத்ராபாளையம், சாளரப்பட்டி, மடத்துக்குளம், நீலம்பூர் உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் ஈரமானதால் அறுவடைக்கு காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தற்போது பெய்த கோடை மழையால் நெற்பயிர்கள் சாயும் அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

அதேநேரம், பயிர்கள் நனைந்து நிலம் சகதியாக மாறியுள்ளது. உள்ளே சென்று ஆறு வடை செய்ய 15 நாட்கள் ஆகிவிடும்.

அதன்பிறகு காயவைத்த பிறகே கொள்முதல் மையத்துக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, நெல் கொள்முதலை முடித்து விடாமல், கால நீட்டிப்பு செய்ய வேண்டும்" என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...