கோவை மாநகர காவல்துறையினருக்கு வாராந்திர உடற்பயிற்சி!

கோவையில் மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்களுக்கு உடற்பயிற்சியுடன் அணிவகுப்பு ஒத்திகை பயிற்சியும் அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு வாராந்திர உடற்பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு வாரம் தோறும் உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகிறது.



அதன்படி, இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சி, ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.



இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்றனர்.



அப்போது அவர்களுக்கு உடற்பயிற்சிகள் மற்றும் அணிவகுப்பு ஒத்திகைகள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...