தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் - பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தகவல்!

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் தமிழ் இணைப்பு 24 மணி நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். ஹிந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் மட்டுமே இயங்கி வந்த இணையதளத்தில் 7வது மொழியாக தமிழும் இணைக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியையும் இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், அது நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்பி சண்முக சுந்தரம் கூறியதாவது:

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் விண்ணப்பம் மற்றும் இணையதளங்களில் தமிழ் மொழியை தவிர்த்து ஹிந்தி, மலையாளம், கன்னடா உள்ளிட்ட 6 மொழிகள் மட்டும் இடம்பெற்றிருந்தன.

இதனால், தமிழக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், தமிழ் மொழியை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஏப்ரல் 5-ம் தேதி தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு நான் கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தேன்.

இதை தொடர்ந்து, 24 மணி நேரத்தில் தமிழ் மொழியை தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் மத்திய அரசு இணைத்துள்ளது. இந்நடவடிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...