உடுமலை பைபாஸில் இணைப்பு சாலை துண்டிப்பு - வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலையில், பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியில், மழை நீர் வடிகால் பணிக்காக பாலம் இடிக்கப்பட்டு தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாமல் 7 மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்ட பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிறுத்தம் அருகே, பொள்ளாச்சி சாலையையும், பைபாஸ் சாலையையும் இணைக்கும் வகையில், சாலை அமைக்கப்பட்டுள்ளது. பழனிசாலை, பொள்ளாச்சி சாலையில் வரும் வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனைக்கு செல்லும் பேருந்துகளுக்கு பிரதான வழித்தடமாக இருந்தது.

கடந்த, ஏழு மாதத்திற்கு முன், இப்பகுதியில் மழை நீர் வடிகால் துார்வாரும் பணியின் போது, மழை நீர் வடிகால் மீதிருந்த பாலம் அகற்றப்பட்டதோடு, மழை நீர் வடிகாலும் இடிக்கப்பட்டது. இதனால் பைபாஸ் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை இணைக்கும் வழித்தடம் துண்டிக்கப்பட்டது.



அதற்கு பின், கட்டட கழிவுகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடிகால் பாலம் கட்டப்படாமலும் உள்ளது. இதனால், இரு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.



கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட இவ்வழியாக வந்த வாலிபர் ஓருவர் மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து காயம் அடைந்தார். எனவே, நகராட்சி அதிகாரிகள், கட்டட கழிவுகளை அகற்றி, பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...