‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ கண்காட்சியை நேரில் கண்டு ரசித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

கோவை வ.உ.சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியினை நேரில் பார்வையிட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்தார்.



கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் பார்வையிட்டார்.



கோவை வ.உ.சி பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பான, “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பார்வையிட்டார்.



இதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,



“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்று இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படமும் நன்றாக உள்ளது. கட்சியில் கடைசி தொண்டனாக இருந்து ஆரம்பித்து தலைமைக்கு வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் இந்த கண்காட்சி முதலில் நடைபெற்றது. தற்போது, செந்தில் பாலாஜி மூலம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது. நான் இங்கு வந்து அந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளேன் முதல்வர் அவர் கடந்து வந்த பாதை புகைப்படம் கண்காட்சியை கண்டிப்பாக அனைவரும் பாருங்கள்.

இதனையடுத்து அவரிடம் உங்களுக்கு பிடித்த புகைப்படம் என கேட்கப்பட்ட கேள்விக்கு, முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது எனக்கு பிடித்தது என பதிலளித்தார்.

முதல்வர் தனது இளம் வயதில் கிரிக்கெட் ஆடுவது 23 வயது 25 வயது பயண புகைப்படம் என்னுடைய தலைமுறைக்கு அது தெரியாது. முதல்வரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல ஒரு கண்காட்சி அனைவரும் வந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...