கோவை நஞ்சுண்டாபுரம் அருகே தரைப்பால தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - ஒருவர் பலி!

நஞ்சுண்டாபுரம் பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், பின்னால் இருந்த தொழிலாளி, பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தரைப்பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (49). கூலி தொழிலாளியான இவர், இன்று காலை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த வினோத் (32), என்பவருடன் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை வினோத் ஓட்டிச்சென்ற நிலையில், குமார் பின்னால் அமர்ந்துள்ளார். இருவரும் நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள தரைப்பாலம் அருகே வந்த போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.



இதில், குமார் தூக்கிவீசப்பட்டு தரைப்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற வினோத் காயமடைந்தார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து, அங்கிருந்தவர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சந்தேகம் உள்ளதாக குமார் உறவினர்கள் கூறியதால் வினோத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...