திருப்பூரில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் பகுதியில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் பகுதியில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் நண்பர்கள் குழு சார்பில் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கு நோன்பு துறக்கும் நிகழ்வானது நடைபெற்றது.



இதில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில், ஜாதி மத பேதமின்றி அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...