கோவை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து - அரசு பள்ளி தலைமை ஆசிரியை பலி!

கோவை பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சத்தியவேணி(55) கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சென்ற போது அவரது பைக் மீது வேன் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வஞ்சிமாநகரை சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி சத்தியவேணி(55). இவர் பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக நரசிம்மநாயக்கன்பாளையத்திற்கு சென்றுவிட்டு, ஸ்கூட்டரில் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.



அப்போது, தெற்குபாளையம் பிரிவு அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த டீ கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவில் விபத்து குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதில் சத்தியவேணி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த வேன் அவர் மீது மோதியதில், தூக்கிவீசப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய வேன், தலைமை ஆசிரியை மீது மோதுவதற்கு முன்பு அவருக்கு முன்னால் இருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீதும் மோதியுள்ளது. அதில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...