உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவரின் வீட்டில் நுழைந்து, 6 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து உடுமலை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூலாங்கிணறு பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் பஞ்சலிங்கம் (வயது 58). மில் தொழிலாளி. இவருடைய மனைவி பாலக்காட்டிலுள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் பஞ்சலிங்கம் தனியாக வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இரவுப் பணிக்காக இரவு 9.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு மில்லுக்கு சென்றார்.

பின்னர் வேலை முடிந்து மறுநாள் காலை 6 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனால் பதற்றமடைந்த பஞ்சலிங்கம், உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அறையில் சிதறிக்கிடந்தன.

மேலும், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த பஞ்சலிங்கம், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து பஞ்சலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உடுமலை போலீசார் மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் புதிய நபர்கள் நடமாட்டம் ஆகியவை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...