கங்கையில் புனித நீராடிய எம்எல்ஏ வானதி சீனிவாசன் - மக்கள் நலனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை!

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்குப் பிறகு உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், ரிஷிகேஷியில் உள்ள கங்கை நதியில் நீராடிய புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து அனைவரின் நலனுக்காக பிரார்த்தித்ததாக பதிவிட்டுள்ளார்.


கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் புனித நீராடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சட்டமன்றம் முதல் கட்சி நிகழ்ச்சிகள் வரை விறுவிறுப்பாக இயங்கி வருபவர் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு பிறகு ஆன்மிக தலமான உத்தரகண்ட் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி , கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இந்து குருக்களை சந்தித்து அவர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து ரிஷிகேஷில் உள்ள கங்கை நதி கரையில் புனித நீராடி அந்த புகைப்படங்களை வானதி சீனிவாசன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், மக்களின் நன்மைக்காக பிரார்த்தித்துக் கொண்டதாக வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

இந்துக்களின் புனித நதியாக திகழும் கங்கை நதியானது 2,525 கிலோமீட்டர் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை கரையில், ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...