உடுமலை - மூணாறு சாலையில் மிரட்டும் ஒற்றை யானையால் பரபரப்பு

உடுமலை - மூணாறு சாலையில் உள்ள புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை ஆண் யானை, வாகனங்களை மறித்து தாக்குவதால், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை - மூணாறு சாலையில் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு, மறையூர் பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

பருவ மழை குறைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அமராவதி அணையை நோக்கி, யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் படையெடுத்த வண்ணம் உள்ளது.



இந்நிலையில், ஏழுமலையான் கோவில் முதல் புங்கன் ஓடை பாலம் வரையிலான பகுதியில், ஒரு ஆண் யானை மட்டும் முகாமிட்டுள்ளது.

இவ்வழியே வரும் பேருந்து, லாரி, சுற்றுலா வாகனங்களை மறித்தும், கண்ணாடிகளை உடைத்தும், அச்சுறுத்தி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை யானை வாகனங்களை வழி மறித்து தாக்குகின்றன. யானை கூட்டத்திலிருந்து விலகி வந்து, மிகவும் கோபமான மன நிலையில் சாலை பகுதியில் முகாமிட்டுள்ளது.

எனவே, இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...