கோவை அருகே மதுபோதையில் சாலையிலேயே படுத்து உறங்கிய பெண் - போக்குவரத்து பாதிப்பு!

பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கிய நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பின் அவரை எழுப்பி அனுப்பி வைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் மதுபோதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி - கோவை சாலை பகுதியில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இந்நிலையில், போக்குவரத்தை சரி செய்ய காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே படுத்து உறங்கியுள்ளார்.

தொடர்ந்து, அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அந்த பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி அப்பகுதியில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.



ஆனால் மது போதை தலைக்கு ஏறிய நிலையில் அங்கிருந்த போலீசாரை கேலி, கிண்டல் செய்ததுடன் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அந்த பெண் ஈடுபட்டார்.



போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்த வாகனங்களை சைகை முறையில் கை அசைத்து சிறிது நேரம் போக்குவரத்து பணியை செய்தார். பின்பு நீண்ட நேரம் போராடிய போலீசார் அந்த பெண்ணை அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...