எங்கள் சமூகம் மீது அவதூறு பரப்புகிறார்..! - நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா மீது பண்டார குல நல சங்கம் புகார்!

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா பண்டார குல சமுதாயத்தினர் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பண்டார குல நல சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பண்டார குல நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பண்டார சமுதாயத்தை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆ.ராசாவின் இந்த பேச்சு, யூடியூப் தளத்தில் வெளியாகி, எங்களது சமுதாய மக்கள் பிற சமுதாய மக்களிடம் மிகவும் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தில் எடுத்துள்ள உறுதி மொழியின் படி இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார்.



எனவே நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அதேபோல் யூ டியூபில் தங்கள் சமுதாயம் பற்றி பதிவிடப்பட்ட வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...