கோவையில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபர் கைது!

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், குடிபோதைக்கு அடிமையான இவர், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் தனலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தட்டிக்கேட்ட சகோதரியையும் தாக்கியுள்ளார். இவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தம்பதி நடராஜ்-தனலட்சுமி (60). இவர்களது இளைய மகன் மணிகண்டன் (34). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினந்தோறும் குடித்துவிட்டு, தாய் தனலட்சுமியை மிரட்டி பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன், தாய் தனலட்சுமியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற அவரது அக்காவையும் குடிபோதையில் தாக்கியுள்ளார். இதை அடுத்து தனலட்சுமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மணிகண்டன் மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...