ஈஷாவிற்கு மோடி வருகையை எதிர்த்து கருப்பு பலூன் பறக்கவுடும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் அமைப்பினர்



கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்து, வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஈஷா யோகா மைய சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது யானை முகங்களுடனும், கருப்பு பலூன்களுடனும் முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதிக்கட்சியினர், வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து போராட்டக்காரர்கள் கைகளில் இருந்த பலூன்களை காவல் துறையினர் உடைத்தனர். 



இப்போராட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறும்போது, ஈஷா யோகா மையத்தினர் காடுகளை அழித்தும், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்தும், அனுமதியின்றி சட்ட விரோதமாக கட்டப்பட்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பது கண்டிக்கத்தகக்து எனவும், இது ஈஷாவின் குற்றச்செயல்களை பாதுகாக்கும் நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...