திருப்பூரில் ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடும் விலை உயர்வு, தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளால் பனியன் தொழில் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இந்த சூழலில் பனியன் தொழிலை நம்பி இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக வாகன ஓட்டுனர்களை வெகுவாக பாதிக்கும் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட ஏ ஐ டி யு சி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், ஆவணங்கள் சரியாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக வழக்கு போடுவோம் என போலீசார் மிரட்டுகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டுநர்களை ஒருமையில் கேவலமாக பேசுகின்றனர்.



திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு தாராபுரம் ரோடு பல்லடம் ரோடு அவிநாசி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நாள்தோறும் பலமுறை ஆவணங்களை சரி பார்ப்பதாக கூறி வாகனங்களை காத்திருக்க வைக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.



இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...