மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த பாகுபலி யானை! - பொதுமக்கள் அச்சம்

வனப்பகுதியிலிருந்து வெளியேறி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் புகுந்த பாகுபலி யானை, பொருட்களை அடித்து நொறுக்கி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பாகுபாலி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது.

இந்நிலையில் அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்புக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.

கடந்த 3 மாதங்களுக்கு பின் பாகுபலி யானை வனப்பகுதியிலிருந்து வெளியேறி நெல்லிமலை, சமயபுரம் பகுதியில் சுற்றி திரிகிறது. கடந்த சில நாட்களாக இரவில் மட்டுமே வந்த யானை ஊருக்குள் வந்து சென்றது.

இந்நிலையில் நேற்று முதல் பகல் நேரத்திலும் யானை கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் யானை செல்லும் வழியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், வீட்டில் இருக்கும் பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டுச் செல்கிறது.

எனவே பகல் நேரத்தில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...