தாராபுரம் வந்த சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் - பொதுமக்கள் தரிசனம்

தாராபுரத்தில் வி.எச்.பி கிராம கோயில் பூசாரிகள் பேரவையில் சார்பில் அழைத்துவரப்பட்ட சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதத்திற்கு, பக்தர்கள் அபிஷேகம் நடத்திய வழிபாடு செய்தனர்.


தாராபுரம்: தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக தாராபுரத்திற்கு சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் அழைத்து வரப்பட்டது.

தாராபுரம் நாடார் தெருவில் உள்ள பழையூர் புதூர் பெரிய காளியம்மன் கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு சமயபுரம் மாரியம்மன் சிலை வைக்கப்பட்டது.

அப்போது, பக்தர்கள் தாங்களாகவே அம்மனுக்கு மஞ்சள்நீர், பால், தயிர், இளநீர் உள்பட 10 விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள சகல பிரச்சினைகளும், தோஷங்களும் நீங்கி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் திருப்பூர் கோட்ட அமைப்பாளர் சின்ன குமரவேல், கோவில் பூசாரி துர்க்கேசன், ரத பூசாரிகள் பாபு, சங்கர், துரை உள்பட பக்தர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...