கோவையில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியில், புகை இதயத்திற்கு பகை, உணவே மருந்து, சக்கரையை கட்டுப்படுத்துங்கள் இதயத்தை பாதுகாக்கலாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

அண்மைக்காலமாக மக்களுக்கு இருதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் வயது அதிகமானவர்களுக்கு மட்டும் இருதய கோளாறு ஏற்பட்டுவந்த நிலையில், தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக திடீர் மாரடைப்பால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் (கே.ஜி) மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் நீதிமன்றம், தெற்கு வட்டாட்சியர் அலுவலக சாலை வழியே நடைபெற்றது.

இதில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்தம் ஆபத்தானது, ஹார்ட் ஃபெயிலியர் என்பது மாரடைப்பல்ல, புகை இதயத்திற்கு பகை, உணவே மருந்து, சக்கரையை கட்டுப்படுத்துங்கள் இதயத்தை பாதுகாக்கலாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் .

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...