மின்கட்டண உயர்வைக் கண்டித்து ஏப்.20ல் கதவடைப்பு ஆர்ப்பாட்டம் - டான்சியா அறிவிப்பு

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20-ம் தேதி கதவடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு குறு,சிறு தொழில்கள் சங்கம் அறிவித்துள்ளது.


Coimbatore: தமிழ்நாடு குறு,சிறு தொழில்கள் சங்கமான டான்சியாவின் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதில், மின்வெட்டால் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு மின்கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும். உச்ச நேரம் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் தொழில்நிறுவனங்களை அடைத்தும், மாவட்ட தலைநகரங்களில் தொழில்முனைவோர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்கட்டண உயர்வு மிக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசு மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும் என தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் ( ‘டான்சியா’) துணை தலைவர் சுருளிவேல் தெரிவித்தார்.



சென்னை இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் நிறுவன தலைவர் ரகுநாதன் கூறியதாவது:

மின்கட்டண உயர்வு பிரச்சினைக்கு தொடக்கத்திலேயே தீர்வு கண்டிருக்க வேண்டும். தொழில்முனைவோர் எப்போதும் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள். முதலில் கோரிக்கை மனு அளிப்பார்கள். காத்திருப்பார்கள். நடவடிக்கை எடுக்காவிட்டால் கடைசியில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.மத்திய அரசு மற்றும் மாநில அரசு தொழில்முனைவோர் பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும், கோரிக்கைகளை கேட்கவும் மறுக்கின்றனர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம் கடைசி முயற்சியாகத்தான் பார்க்க வேண்டும். இப்போராட்டம் முன்பே செய்திருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஜிஎஸ்டி கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக கடந்த 8 மாதங்களாக பல்வேறு தொழில் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்டசபையில் மின்கட்டண உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏ வேலுமணி பேசிய போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் குறு, சிறு தொழில்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். கள நிலவரம் தெரியாமல் பேசினாரா அல்லது கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டாரா என்பது தெரியவில்லை.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...