குன்னூரில் பேக்கரியில் நுழைந்த கரடி - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

குன்னூர் அருகே உணவு தேடி பேக்கரிக்கு வந்த கரடி, நீண்ட நேரம் போராடியும் கடையை திறக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பகுதியில் சமீபகாலங்களாக கரடிகள், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது அதிகரித்து உள்ளது.

இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியில் கரடி ஒன்று நேற்று இரவு அப்பகுதிக்குள் நுழைந்து, உணவுக்காக அங்குள்ள பேக்கரியின் கதவை திறக்க முயன்றது.



நீண்ட நேரம் போராடியும், பேக்கரியின் கதவை திறக்க முடியாததால் ஏமாற்றமடைந்த அந்த கரடி, அங்கிருந்து வேறு பகுதிக்கு நகர்ந்து சென்றது. இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்த காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், கரடி நடமாட்டம் குறித்து அப்பகுதி பொதுமக்கள், குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...