கிணத்துக்கடவு அருகே திமுக ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் - பொதுமக்கள் முற்றுகை!

கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் கடத்தலை தடுக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கிணத்துக்கடவில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி கிணத்துக்கடவு காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட நம்பர் 10 முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு அனுமதியின்றி கிராவல் மணல் லாரியில் கொண்டு செல்வதாக ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சதீஷ்குமார் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதில் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த ஒரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில், காயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி நம்பர் 10 முத்தூர் பகுதி சேர்ந்த கிராம மக்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தை திடீரென முற்றறுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், அங்கிருந்த காவல்துறையினர் முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதி சேர்ந்த காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம், ஈஸ்வரன், சாந்தலிங்கம் ஆகிய ஐந்து பேரும் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஈஸ்வரன், சாந்தலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...