சமூக வலைத்தளத்தில் அவதூறு, வன்முறையை தூண்டும் வகையில் பதிவு - கோவையில் பாஜக நிர்வாகி கைது!

மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த பாஜக தொழில் பிரிவு மாநில துணை தலைவர் செல்வகுமாரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சமூகவலைதளங்களில் அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்த பாஜக தொழில் பிரிவு மாநில துணை தலைவர் செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரில் சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிடும் நபர்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தொழில்துறை பிரிவு துணை தலைவர் செல்வகுமார், மின்சாரத்துறை அமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக தொழில் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 2022ஆண்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்று வெளியே இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் மற்றும் பதில் பதிவுகள் (Retweet) ஆகியவை பல்வேறு பிரச்சனைகளை தூண்டும் வகையில் உள்ளது

இதுதொடர்பாக போலீசாருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த காரணத்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளது. மேலும் செல்வகுமார் மீது கரூர் மாவட்டத்தில் மோசடி வழக்கு ஒன்று உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...