கோவையில் அவதூறு வழக்கில் கைதான பாஜக நிர்வாகி - ஏப்.26ம் தேதிவரை நீதிமன்றக் காவல்!

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக பாஜக தொழில்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் 26 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து சமூகவலைதள பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட பாஜக பிரமுகர் செல்வகுமார், வரும் 26-ஆம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையை சேர்ந்த பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் என்பவர், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து. அவரது பதிவுக்கு பல்வேறு பதில் பதிவுகள் வெளியான நிலையில் திமுகவை சேர்ந்த ஐ டி விங் நிர்வாகிகள் அடுத்தடுத்து புகார் அளிக்கத் தொடங்கினர். அதில் திமுக ஐடி விங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் என்பவர் பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மார்ச் 6ஆம் தேதி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை செல்வகுமார் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக, கணபதியை சேர்ந்த திமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார் அடிப்படையில் மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று செல்வகுமாரை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட நிலையில் மாலையில் கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 26 ஆம் தேதி வரை செல்வகுமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பாஜக நிர்வாகி செல்வகுமார், அவதூறான கருத்துக்களை ட்விட்டர் மூலம் பதிவு செய்வதால் அவருக்கு பதில் அளிக்க மற்ற அரசியல் கட்சியினரும் அவதூறான கருத்துக்களை பதிவிடுவதால் தேவையற்ற வன்முறைகள் உருவாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...