குவாலிட்டி மேனேஜர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் காலியாகவுள்ள குவாலிட்டி மேனேஜர் (Quality Manager)பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்.21ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் காலியாக உள்ள குவாலிட்டி மேனேஜ்ர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை, சிங்காநல்லூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ESI (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி) மருத்துவமனையில் குவாலிட்டி (Quality Manager) பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில். தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறுத்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பணி குறித்தான விரிவான விபரங்களை கோவை மாவட்ட Coimbatore.nic.in இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 21.04.2023 அன்று மாலை 5 மணிக்குள், முதல்வர்,அரசு மருத்துவகல்லூரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோயமுத்தூர்-641015 அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

மேற்படி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 24.04.2023- ம் தேதி 10 மணிக்கு கோவை, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...