தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் ரூ.29 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை!

தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்க சுமார் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த பூமிபூஜையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் 2022 மற்றும் 23 நிதியாண்டிற்கான 15வது நிதி குழு மாநிலத்தில் 29 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டது.

அதில் உடுமலை சாலை ஏழாவது வார்டு பகுதியில் குறிஞ்சி நகர் மற்றும் சலவையாளர் காலனிக்கு சிமெண்ட் சாலை அமைக்க பதினைந்து லட்சமும் அலங்கியம் சாலையில் உள்ள மெட்ரோ சிட்டியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, அந்த பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் பைப் லைன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் மெட்ரோ சிட்டி மற்றும் மலையம்மன் நகர் ஆகிய 2 நகர்களுக்கு 14 லட்சம் உள்ளிட்ட மொத்தம் 29 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ரமேஷ் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், ஊராட்சி துணை தலைவர் நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர் சரஸ்வதி தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் பெரியசாமி ஏற்பாடு செய்தார்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...