சூலூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு!

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி தாசில்தார் அலுவலகத்தில், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பொது பாதையை தனிநபர் இருவர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு வீரங்காடு பகுதியை சுற்றிலும் சொந்தமாக தோட்டம் உள்ளது. அப்பகுதியில் மாரியப்பன் உள்பட 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாரியப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனை கண்டித்து, சூலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்தை நாடுவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...