பெண் காவலர்களின் பொன்விழா - கோவையில் 50 கி.மீ சைக்கிள் பயணம்!

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு கோவையில் 50 கி.மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.



கோவை: பெண் காவலர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக 50 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன்விழா கொண்டாடப்படுகிறது. பெண் காவலர்களின் சேவையை போற்றி மரியாதை செய்யும்விதமாக கோவையில் 50 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றது.



'நோ ஹெல்மெட், நோ ரைடு ... ஃபாலோ ரோட் ட்ராபிக் ரூல்ஸ்' என்ற விழிப்புணர்வுடனும் இந்த சைக்கிள் பயணம் நடந்தது. பிரபல சைக்கிளிங் வீரரான விஷ்ணு ராம் என்பவர் முயற்சியில் இந்த சைக்கிள் பயணம் நடந்தன.



கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் சுகாசினி, சைக்கிளிங் வீரர் விஷ்ணு ராம், காவலர்கள், பொதுமக்கள் என 120 பேர் கலந்துகொண்டனர்.



மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆரம்பித்த இந்த சைக்கிள் பயணம் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், பேரூர் வழியாக செல்வபுரம் வந்தடைந்தனர். 50 கிலோ மீட்டர் தூரத்தினை 2 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...