பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் வாலிபர் தற்கொலை - கிரிக்கெட் சூதாட்டம் காரணமா?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரபல தனியார் விடுதியில் சபாநாயகம் எனும் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் வரை பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை: பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம் (35). இவர் நேற்று அதிகாலை 2.10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இன்று அறையை அவர் காலி செய்ய வேண்டியிருந்ததால், விடுதி ஊழியர்கள் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது,சுவிட்ச் ஆப் ஆகி இருந்துள்ளது. உடனே அறையின் மாற்றுச் சாவியை கொண்டு, ஊழியர்கள் திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது பாத்ரூம் அருகே இறந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் தகவல் கூறியதை தொடர்ந்து,அவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு இறந்து ஐந்து மணி நேரம் ஆகிறது என்று கூறியுள்ளனர்.



பின்னர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் வரை பணத்தை இழந்ததால், மனவேதனையில் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...