திருமூர்த்தி அணை நீர்மட்டம் தொடர் சரிவு - அணை பகுதியில் ஆடு மேய்க்கும் விவசாயிகள்!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் கோடை வெயில் மற்றும் மழை குறைந்ததன் காரணமாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், அணை பகுதியில் தற்போது வெளியில் தெரியும் புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணை பகுதியில் உள்ள புல்வெளிகளில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட் சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையில் இருந்து நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இது தவிர, உடுமலை நகருக்கும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இந்த அணை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது மூன்றாம் மண்டலத்துக்கு வரும் 20-ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் குறைந்ததால் வெளியில் தெரியும் புல்வெளியில் விவசாயிகள் ஆடு மேய்க்கின்றனர்.



இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் பின்பக்க இடங்களில் மண் மேடாக காட்சி அளிக்கிறது. அதில் விவசாயிகள் ஆடு மேய்த்து வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் தற்போது 31.56 அடியாக உள்ளது. காண்டூர் கால்வாய் மூலம் 571 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 944 கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...