உடுமலை அருகே மூதாட்டியிடம் வழிப்பறி - இளைஞர்கள் 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையில் நடந்து சென்ற பாண்டியம்மாள் எனும் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து திருடிவிட்டு தப்பிய சூரியஜெகதீஸ், கார்த்தி என 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை கணக்கம் பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியம்மாள்(வயது65). இவர் கடந்த 10ம் தேதி, மாலை 6 மணிக்கு பொன்னேரியில் இருந்து அய்யம்பாளையம்புதுார் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, அவ் வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், பாண்டியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்து கொண்டு தப்பியோடினர். இது குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், மூதாட்டியிடம் இருந்து செயினை பறித்து சென்றது, கோட்டூர் தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த சூரியஜெகதீஸ்(வயது26) பொங்காளியூர் கார்த்தி(வயது26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் குடிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

இந்த இரு நபர்கள் மீதும், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சில வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்ததையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...