திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் விருது!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் விஜிலா. இவருக்கு மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வியாளருக்கான சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது


திருப்பூர்: திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் சேவை விருது வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றுபவர் விஜிலா. இவர், பல்வேறு பணியிடை பயிற்சிகளில், கருத்தாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஆங்கில பாடத்துக்கான, கையேட்டினை வடிவமைத்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். இவரது பணிகளை பாராட்டி, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வி சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் தலைமை வகித்து விருது வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...