சிறைவாசிகள் 27 பேருக்கு தொழிற்பயிற்சி நிறைவு சான்றிதழ்

சிறைவாசிகளுக்காக கோவை மத்திய சிறையில் கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், தொழில் பயிற்சி முடித்த 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜி.சண்முகசுந்தரம் மற்றும் சிறைக்கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: தமிழக சிறை துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சிறையில் இருந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகள், விடுதலைக்குப் பிறகு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடா வண்ணம் தொழில் தொடங்க அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.



அதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சுயதொழில் பயிற்சி நிலையம் மூலம், மத்திய சிறைவாசிகளுக்கு ஏசி, ரெப்ரிஜிரேட்டர், மற்றும் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.



அதில் பயிற்சி பெற்ற 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா ஆகியோர் சிறைவாசிகளுக்கு பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து, சிறைவாசிகள் கணினி பயிற்சி மேற்கொள்ளும் வகையில், 20 கணிப்பொறிகள் கொண்ட கணினி பயிற்சி மையத்தை கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் தொடங்கிவைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...