காங்கேயம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய போதை இளைஞர்கள் - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வழிவிடாமல் சென்ற போதை இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஹாரன் அடித்தததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அரசு பேருந்து ஓட்டுநரை நடுரோட்டில் வைத்து சராமரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



திருப்பூர்: ஈரோட்டில் இருந்து பழனிக்கு பழனி கிளையை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. பேருந்தை மேகநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது அரச்சலூர் அருகே வடபழனி பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர், போதையில் அரசு பேருந்திற்கு வழிவிடாமல் வந்ததாக கூறப்படுகிறது.

உரிய நேரத்தில் பேருந்தை இயக்க வேண்டும் என்பதால் பேருந்து ஓட்டுநர் இளைஞர்களின் வாகனங்களை நோக்கி ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே போதையில் இருந்த இளைஞர்கள் மீண்டும் பேருந்துக்கு வழி விடாமல் சென்றுள்ளனர்.



காங்கேயம் அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் நின்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து கிளம்பியபோது இருசக்க வாகனங்களில் பேருந்தை வழிமறித்த போதை இளைஞர்கள் சட்டை இல்லாமல் அரைகுறை ஆடையுடன் பேருந்தை நிறுத்த சொல்லி கலாட்டாவில் ஈடுபட்டனர்.



பின் பேருந்து ஓட்டுநரின் இருக்கைக்குச் சென்ற அந்த இளைஞர்கள், ஓட்டுநரான மேகநாதன் சட்டையைப் பிடித்து இழுத்து, நடுரோட்டில் வைத்து சராமாரியாக தாக்கியுள்ளனர்.

சம்பவத்தை பார்த்த பேருந்து பயணிகள், போதை இளைஞர்களிடமிருந்து அரசு பேருந்து ஓட்டுநரை மீட்டு அனுப்பி வைத்தனர். தாக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர் மேகநாதன், காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் , அந்த புகாரின் பேரில் போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்படுவதை பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் எடுத்து வெளியிட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...