கோவையில் இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து - ஒருவர் பலி

கோவை வடமதுரை தடாகம் சாலையில் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி, இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கேசவன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை துடியலூரை அடுத்த பழனிக்கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். வெல்டராக வேலை செய்து வருகிறார்.

இவர் தனது பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வடமதுரை தடாகம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி கேசவனின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கேசவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் சிவகுருநாதனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...