கோவையில் டாடா நிறுவனம் சார்பில் மின்சார வாகனங்களுக்கான பவர் சார்ஜிங் மையங்கள் அமைக்க ஒப்பந்தம்!

கோவை மாநகராட்சியில் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் POWER FAST CHARGING STATION அமைக்க கோவை மாநகராட்சி மற்றும் டாடா பவர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ செய்யும் நிலையங்கள்‌ அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகியுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக‌ கூட்டரங்கில்‌ கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ டாடா பவர்‌ நிறுவனம் இணைந்து கோவை மாநகரில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது, மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் மற்றும் டாடா பவர்‌ நிறுவன விற்பனை தலைவா்‌ வீரேந்திர கோயல்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சியில்‌ பெருகி வரும்‌ மின்சார வாகனங்களால்‌ சுற்றுச்சூழலுக்கும்‌, பொதுமக்களுக்கும்‌ பல நன்மைகள்‌ ஏற்படுகிறது. இதனை மேலும்‌ அதிகரிக்கும்‌ நோக்கத்தோடு கோவை மாநகராட்சியில்‌ 20 இடங்களில்‌ சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைப்பது அவசியமாகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு மற்றும்‌ தமிழ்நாடு அரசின்‌ வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நார்வாகம்‌ மற்றும்‌ டாடா பவர்‌ நிறுவனம் மும்பை ஒருங்கிணைந்து சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைக்க திட்டமிட்டுள்ளது.

சார்ஜிங்‌ நிலையங்களில்‌ TATA POWER EZ CHARGE Application வழியாக சார்ஜிங்‌ நிலையங்களை கண்டறிதல்‌, மின்சார வாகனங்களுக்கு சார்ஜ்‌ செய்தல்‌, அதற்கான கட்டணங்களை செலுத்துதல்‌ உள்ளிட்டவை TATA POWER EZ CHARGE Application வழியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வாகனத்திற்கு 60 நிமிடத்தில்‌ 80% வரை சார்ஜிங்‌ செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில்‌ கீழ்கண்ட 20 இடங்களில்‌ சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ 4 இடங்கள்‌, அவினாசி சாலை வ.உ.சி. பூங்கா பகுதியில்‌ 2 இடங்கள்‌, வாலாங்குளம்‌ பகுதியில்‌ 2 இடங்கள்‌, பெரியகுளம்‌ பகுதியில்‌ 1 இடம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ 3 இடங்கள்‌,

சரவணம்பட்டியில்‌ 1 இடம்‌, புரூக்‌ பீல்ட்ஸ்‌ அருகே மாநகராட்சி வானக நிறுத்துமிடம்‌ 1, சிங்காநல்லாரில்‌ 1 இடம்‌, அவினாசி சாலை டைடல்‌ பாரக்‌ அருகே 1 இடம்‌, காந்திபுரம்‌ கிராஸ்கட்‌ சாலை அருகே 1 இடம்‌, காளப்பட்டி சாலையில்‌ 2 இடங்கள்‌, துடியலாரில்‌ 1 இடம்‌ ஆகிய 20 இடங்கள்‌ ஆகும்‌.

இந்நிகழ்வில்‌ டாடா பவர்‌ நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர்‌ அர்விந்த்‌ சுப்பிரமணியன்‌, டாடா பவர்‌ கம்பெனி லிட்‌, சேனல்‌ பார்ட்னர்‌ தமிழ்நாடு கோகுல கண்ணன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...