கோவை தெற்கு, மத்திய மண்டலங்களில் வளர்ச்சி பணிகள் - மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில்‌ கழிவு வெளியேற்றும்‌ இடத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதியில்‌ சிசிடிவி கேமராக்களை பொருத்தி கழிவுநீர் வாகனங்களை கணிகாணிக்கவும்‌, சுற்றுசுவர்‌ அமைக்கும்‌ பணியை விரைவாக செய்து முடிக்கவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



தொடர்ந்து அதே பகுதியில்‌ உள்ள சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்றும்‌ நிலையத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மழை காலங்களில்‌ மழைநீருடன்‌ கழிவுநீர் கலக்காமல்‌ தனியாக குழாய்‌ அமைத்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும் அதே பகுதியில்‌ உள்ள மக்கும்‌ குப்பைகளைக்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ அதிகாரிகளும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்‌.



இதேபோல் கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குறிச்சி குளத்தில்‌ சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ சீர்மிகு நகர திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, டாடாபாத்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி அறிவியல்‌ பூங்காவில்‌ நடைபெற்று வரும்‌ புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவில்‌ செய்து முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



பின்னர் கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌

மேம்பாட்டு பணிகளின்‌ ஒரு பகுதியாக வாகனங்களின்‌ பயனற்ற உதிரி பாகங்களை கொண்டு மறுசுழற்சி முறையில்‌ மாதிரி கார்‌, கிராமபோன்‌, அடி தண்ணர்‌ குழாய்‌, பழைய தொலைபேசி போன்றவை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...