கோவை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம்

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், துடியலூர் காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமிக்கப்பட்டார்.


கோவை: துடியலூர் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், சேரன் நகர், ஐ.டி.ஐ. இடையர்பாளையம், ஜி.என்.மில்ஸ், வெள்ளக்கிணர், துடியலூர், விஸ்வநாதபுரம், என்.ஜி.ஜி.ஓ.காலனி, அப்பநாயக்கன்பாளையம், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளை காவல் எல்லையாகக் கொண்டு துடியலூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ரத்தினகுமார் துடியலூர் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று துடியலூர் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் ரத்தினகுமார் அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இரத்தினக்குமர் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் தெற்கில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...