வால்பாறையில் முத்துமாரியம்மன் கோவில் 36 ஆம் ஆண்டு திருவிழா - கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்!

வால்பாறை அடுத்த அண்ணாநகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 36ஆம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அண்ணா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ மகா முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 36 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த திருவிழாவானது ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 20ஆம் தேதியான இன்று காலை 5:30 மணி அளவில் மங்கள வாத்தியம் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



தொடர்ந்து 8 மணி அளவில் ராமர் கோவிலில் இருந்து ஊர் பொதுமக்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர், 11:30 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது.



மதியம் 12:30 மணியளவில் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் மாபெரும் அறுசுவை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் நகர் மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், 10 வது வார்டு கவுன்சிலர் காமாட்சி, கோனார் ஜுவல்லரி வள்ளிக்கண்ணு, கிருஷ்ணா ஜுவல்லரி சிங்காரம், மருத்துவர் முனியசாமி, திமுக நகரச் செயலாளர் சுதாகர்,



நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், 4 வது வார்டு உறுப்பினர் பாஸ்கர் எம்ஜிஆர் தேயிலை தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது மற்றும் பெரியோர்கள் அன்னதானத்தை துவங்கி வைத்தனர்.



இந்த நிலையில், திமுக நகரச் செயலாளர் சுதாகர் மற்றும் 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழி கடை கணேசன் ஆகியோர் அண்ணா நகர் பகுதியில் பிரதான சாலையில் இருந்து கோவில் வரை ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு சாலை அமைத்து தருவதாக கோயில் வளாகத்தில் உறுதி அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...