கோவை மாநகராட்சியில் குப்பைகளை தரம்பிரிக்க 44 தள்ளு வண்டிகள் வழங்கல்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் ரூ.9,86,480 மதிப்பீட்டில்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான பிளாஸ்டிக்‌ 176 புதிய குப்பைத்‌ தொட்டிகளுடன்‌ கூடிய 44 தள்ளுவண்டிகளை 20 வார்டுகளுக்கு உட்பட்ட தூய்மைப்‌ பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளுக்கு குப்பை சேகரிப்பதற்கான தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ ரூ.9,86,480 மதிப்பீட்டில்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான இருவகை பிளாஸ்டிக்‌ 176 புதிய குப்பைத்‌ தொட்டிகளுடன்‌ கூடிய 44 தள்ளுவண்டிகளை 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மைப்‌ பணியாளர்களுக்கு வழங்கினா்.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாயாளா்‌ க.சிவகுமார்‌, மத்திய மண்டல தலைவா்‌ மீனாலோகு, பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வன்‌, ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



அதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வாடு எண்‌.19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ ரூபாய்‌ 99 லட்சத்து 10 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டுமான பணியினை மேயர்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்‌,



மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ ரூ.83 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ ஆய்வகம்‌ கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



மேலும்‌, அப்பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திலுள்ள கழிப்பிடத்தை புனரமைத்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்,



வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.11க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, சிவானந்தபுரம்‌, மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில்‌ காட்டுப்பள்ளிக்கூடம்‌ 33 சதவீதம்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 வகுப்பறைகளின்‌ மராமத்து பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...