திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் தலைமையில் மனு அளித்த மக்கள்

திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களை காலி செய்ய வலியுறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமையில் மனு அளித்தனர்.



திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 37ஆவது வார்டு ரயில்வே லைன் பகுதியில் 112 குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.



அவர்கள் தங்கள் வசித்து வரும் பகுதிக்கு இதுவரை வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி வரக்கூடிய சூழ்நிலையில் திடீரென வருவாய்த்துறையினர் வண்டி பாதை புறம்போக்கு நிலம் என்பதால் காலி செய்ய வற்புறுத்தியுள்ளனர்.



இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு அந்த இடத்திலேயே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...