உடுமலையில் கழிவு நீர் வாகனங்களை பதிவு செய்து உரிமம் பெற நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!

உடுமலை நகராட்சியில் உள்ள கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் குறித்த தகவல்களை நகராட்சியில் பதிவு செய்து, 2 ஆண்டுகள் செல்லும் வகையிலான உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையர் சத்தியநாதன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை, நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உடுமலை நகராட்சியில், மனித கழிவுகள், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால், 2 ஆண்டு செல்லும் வகையில், விண்ணப்பித்த 15 நாட்களில் உரிமம் வழங்கப்படுகிறது.



எனவே, கழிவுநீரை அகற்றும் வாகனங்கள் குறித்து, உடுமலை நகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை, பொது இடங்களில் கொட்டக்கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும். உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...