பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.



பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் அறக்கட்டளையை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் விபத்து உள்ளிட்ட அவசரகால பயன்பாட்டுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

விபத்து போன்ற அவசர காலங்களில் ஏழை எளிய மக்கள் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தொடர்ந்து இது போன்ற சமூக நலப் பணிகளை தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...